
இரவு உணவு கொடுக்காத ஆத்திரத்தில் கணவன், மனைவியை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரி அடுத்த மடிமை கண்டிகையை சேர்ந்த ரவி (65) என்ற முதியவர் செவித்திறன் மற்றும் பேச்சுத்திறனற்ற மாற்றுத்திறனாளி. இவர் மன நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
மனைவி ஜோதியுடன் சம்பவத்தன்று, முதியவர் ரவிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில், ரவியை அவரது மனைவி தாக்கியதோடு, இரவு உணவு வழங்க மறுத்து தூங்க சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த ரவி, தூங்கி கொண்டிருந்த மனைவியை இரும்பு ராடால் அடித்து கொலை செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், முதியவர் ரவியை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in