#BREAKING:ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்திலிருந்து PSLV-C55 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து PSLV-C55 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்டது இதற்கான பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டுக்கான 25 மணி 30 நிமிட கவுண்ட்டவுன் நேற்று (வெள்ளிக்கிழமை) பகல் 12.49 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டெலியோஸ்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் சிங்கப்பூரின் 2 செயற்கைக்கோள்களுடன் PSLV-C55 ராக்கெட்டை இஸ்ரோ ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. 750 கிலோ எடை கொண்ட டெலியோஸ் (TELEOS-2) புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ராக்கெட் சுமந்து செல்கிறது.டெலியோஸ்-2 செயற்கை கோள் மூலம் பூமி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.