கிரிக்கெட் விளையாடிகொண்டிருந்த 14 வயது சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் வன்வாடி என்ற பகுதியை சேர்ந்த சிவாஜி தமன்கோங்கர் என்பவரின் மகன், வேதாந்த் தமன்கோங்கர் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கோடை விடுமுறை என்பதால் அவர் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் கீழே விழுந்தார். பதறிப்போன நண்பர்கள் வேதாந்தின் பெற்றோரிடம் கூறினர். பெற்றோர் விரைந்து வந்து மகனை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து சிறுவனின் உடல் கூராய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில் சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. 14 வயது சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in