காஞ்சிபுரத்தில் பட்டுப்புடவை வாங்க ஏராளமானோர் ஒரே நேரத்தில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இன்று பட்டுப்புடவைகள் வாங்க வெளி மாநிலம், வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் காஞ்சிபுரத்தில் குவிந்தனர். சித்திரை மாதம் சுபமுகூர்த்த நாட்கள் அதிகம் இருக்கும்.
எனவே மணமக்கள் வீட்டார் பட்டு புடவைகளை வாங்கிட அதிகளவிலானோர் காஞ்சிபுரத்தில் படையெடுத்துள்ளனர். இந்நிலையில், இன்று அட்சய திதி மற்றும் குரு பெயர்ச்சி ஒட்டி ஏராளமானோர் பட்டுப்புடவை வாங்க குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் அனைத்தையும் பார்க்கிங்கில் நிறுத்த முடியாமல், சாலையிலேயே நிறுத்தவிட்டு சென்றனர். இதன் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்ல கூடிய நிலை ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி சாலை, தேரடி மூங்கில் மண்டபம், கீரை மண்டபம், மேட்டு தெரு உள்ளிட்ட முக்கிய பிரதான சாலைகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீஸார் சிரமப்பட்டனர்.
newstm.in