விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இரவு ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் மட்டுமல்ல பல ஆண் மகன்களும் அடிமை என்றே கூறலாம். பாக்கியாவிற்கும், எழிலுக்கும் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோல கோபிக்கும் ஏரளமான ஆண் ரசிகர்கள் உள்ளனர்.
பெண்களுக்கு ஊக்கம் கொடுக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ் திடீரென்று வெளியிட்ட வீடியோவால் ரசிகர்களின் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதன்படி பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து கோபி விலகப் போவதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
நான் சொல்ல போறதை கேட்டு உங்களுக்கு கோபம் எரிச்சல் வருத்தம் எல்லாம் வரலாம் ஆனால் எனக்கும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் இதை செஞ்சுதான் ஆக வேண்டும். இன்னும் கொஞ்ச நாட்களில் நான் இந்த சீரியலை விட்டு விலகப் போகிறேன். சதீஷ் ஆகிய நான் கோபியாக நடித்துக் கொண்டிருக்கிற இந்த கேரக்டரை விட்டு விலகுகிறேன். காரணங்கள் பல இருக்கு. ஆனா கொஞ்சம் பர்சனல் ரீசன்னும் இருக்கிறது. எனக்கு இந்த வாய்ப்பு தந்த விஜய் டிவிக்கு மிகவும் நன்றி. நான் எனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக நடித்து முடித்து இருக்கிறேன். இதனால் எனக்கு அன்பு கொடுத்த உங்களுக்கு நன்றி என்று சதிஷ் சொல்லி வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.