
‘லத்தி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஷால் ‘மார்க் ஆண்டனி’ எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் AAA படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இப்படத்தில் ரிதுவர்மா நாயகியாகவும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோருக்கு இரண்டு விதமான தோற்றங்கள் இருக்கும் என்றும், அது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் எனவும் படக்குழுவினர் முன்னதாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் டீஸர் இன்று வெளியானது. மிகவும் வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீஸர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.