தமிழகத்தில் சென்னை அடுத்த பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்த சமந்தாவுக்கு ஆந்திராவில்தான் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஆந்திர மாநிலத்தில் தான் மருமகளும் ஆனார். பின்னர் விவாகரத்து பெற்றாலும் சமந்தாவுக்கு ஆந்திர ரசிகர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு சமந்தாவை அவர்களுக்கு பிடிக்கும்.தற்போது உடல்நல பிரச்சனைகளால் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தாலும் ரசிகர்கள் ஆதரவு அவருக்கு இருந்து கொண்டே தான் உள்ளது
இந்த நிலையில் தான் குண்டூர் அடுத்த பாபட்லா மாவட்டத்தில் அலபாடு கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் என்கிற ரசிகர் சமந்தாவுக்கு கோயில் கட்டி இருக்கிறார். நாளை இந்த கோயில் திறப்பு விழா நடைபெறுகிறது.
கோவில் பற்றி சந்தீப் பேசியதாவது, எங்கள் சமந்தா, பிரத்யூஸா அறக்கட்டளை மூலமாக பல சேவைகளை செய்து வருகிறார். இதை அறிந்ததும் சமந்தாவின் மீது எனக்கு மேலும் மதிப்பு கூடியது. அதனால் அவருக்கு கோயில் கட்ட தீர்மானித்தேன். இதை அடுத்து எங்கள் வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி கோயில் கட்டி வருகிறேன். இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. நாளை திறப்பு விழா நடைபெறுகிறது என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆன்மீக நம்பிக்கை அதிகம் கொண்ட சமந்தா, ஆந்திர, தமிழக கோயில்களுக்கு அடிக்கடி சென்று வருகிறார். இன்று அவருக்கே ஒரு ரசிகர் கோவில் கட்டி இருக்கிறார் ஒரு ரசிகர்.
இதற்கு முன், தமிழ்சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகை குஷ்புவுக்கு தமிழக ரசிகர்கள் கோவில் கட்டி கொண்டாடினர். இந்த வரிசையில் நயன்தாரா, நமீதா, ஹன்சிகா,ஹனிரோஸ் நடிகைகளுக்கும் வேறு வேறு மாநிலங்களில் ரசிகர்கள் கோவில் கட்டி இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகை சமந்தாவுக்கும் ரசிகர்கள் கோயில் கட்டி உள்ளார்கள்.