நடிகர் அஜித், பைக் ஓட்டுவதில் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்குமே தெரிந்தது தான். கடந்த சில மாதங்களாக அவரது பைக்கில், அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச அளவில் நீண்ட சுற்றுப்பயணத்தை முடித்த அவர், சமீபத்தில் தனது பைக்கிங் பயணத்தை மீண்டும் தொடங்கியதாக கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, தற்போதைய சுற்றுப்பயணத்தின்போது அவர் நேபாளத்தில் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக, நேபாளத்தில் அஜித் இருக்கும், பல காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேபாளத்தில் நடிகர் அஜித்துடன் ரசிகர்கள் ஆர்வமுட்ன செல்பி எடுத்துவருகின்றனர். அவை தற்போது வைரலாகி வருகிறது.
ட்விட்டரில் அஜித் ரசிகர் ஒருவர் பகிர்ந்த வீடியோவில், அஜித் நேபாளில் உள்ள ஒரு உணவகத்தின் சமையலறையில் காணப்பட்டார். அவர் உணவு சமைக்கம்போது அணியும் ஏப்ரான் மற்றும் ஒரு சமையல்காரரின் தொப்பியையும் அணிந்திருந்தார். அஜித் அந்த உணவகத்தில் உணவை தயாரித்ததாக கூறப்படுகிறது. அவர் உணவகத்தின் சில ஊழியர்களால் சூழப்பட்டதை வீடியோவில் காணலாம்.