மதம்மாற்றி திருமணம் செஞ்சிவச்சீங்க..இப்ப அவன் ஓடிப்போயிட்டான்…பள்ளி வாசலில் பெண் தர்ணா..! கைக்குழந்தையுடன் ஜமாத்திடம் நீதி கேட்டார்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காதல் கணவன் கைவிட்ட நிலையில், தன்னை மதம் மாற்றி திருமணம் செய்து வைத்த பள்ளிவாசல் ஜமாத்தாரிடம் நியாயம் கேட்டு தரையில் அமர்ந்து இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் லப்பை தெரு பள்ளிவாசல் முன்பாக புர்கா அணிந்த பெண் ஒருவர் கையில் பச்சிளம் குழந்தையுடன் நின்றிருந்தார். அவருடன் தந்தை மற்றும் உறவினர்கள் சிலரும் வந்திருந்தனர். திடீரென பள்ளி வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் … Read more

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் முகக் கவசம் கட்டாயம்

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், அனைத்து மருத்துவமனைகளிலும் இன்று முதல் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி கரோனாதொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது 120-ஐக் கடந்துவிட்டது. அதேபோல, மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை … Read more

நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் – முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு

நியூயார்க்: ஆபாசப் பட நடிகைக்கு ரகசியமாக பணம் கொடுத்த புகாரில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. டொனால்டு ட்ரம்ப் கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலுக்கு முன்பு, ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற ஆபாசப் பட நடிகையுடன் இருந்த தொடர்பை மறைப்பதற்காக அவருக்கு ட்ரம்ப் 1,30,000 டாலர்கள் வழங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான … Read more

சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு: நள்ளிரவு முதல் அமல் – வாகன ஓட்டிகள் அதிருப்தி!

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 1) 29 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம்! நாடு முழுவதும் 800க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை … Read more

Rajinikanth: தலைவரின் அடுத்த பட லுக்.. வெறித்தனமா இருக்கே: தீயாய் பரவும் போட்டோஸ்.!

ரஜினியின் ‘ஜெயிலர்’ பட ரீலிசுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனையடுத்து ரஜினி நடிக்கவுள்ள படத்தை ‘ஜெய் பீம்’ புகழ். தா.செ. ஞானவேல் இயக்கவுள்ளார். இந்நிலையில் ரஜினியின் நியூ லுக் தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் ரஜினி நடிப்பில் கடைசியாக ‘அண்ணாத்த’ படம் வெளியானது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரிலீசான இந்தப்படம் அண்ணன், தங்கை செண்டிமென்ட்டை மையமாக … Read more

மோடி அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு: சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயர்ந்தன

சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதங்களில் மாற்றம்: பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து, அதன் மூலம் பொதுமக்கள் அதிகம் சேமிக்க அரசு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது. செல்வமகள் சேமிப்புத் திட்டம் போன்ற சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை அரசு உயர்த்தியுள்ளது. சேமிப்புத் திட்டத்தில் வட்டி விகித மாற்றம் குறித்த தகவலை அளித்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை, “மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) மற்றும் தேசிய … Read more

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் உட்பட 6 பேர் பலி!

கனடா எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் உட்பட ஆறு பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்தியா மற்றும் ரோ மேனியா நாடுகளை சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக செல்ல முயற்சித்துள்ளனர். கனடாவில் இருந்து செயிண்ட் லாரன்ஸ் ஆறு வழியாக படகில் அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்தபோது, அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து அதில் இருந்தவர்கள் ஆற்றில் அடித்துசெல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், ஆற்றில் மாயமான குழந்தையை தேடும் பணி … Read more

இந்தியா, சீனா ஆகிய நாடுகளை முக்கிய கூட்டு நாடுகளாக அறிவித்தது ரஷ்யா

ரஷ்யாவின் வெளிநாட்டு கொள்கையின் படி இந்தியாவும் சீனாவும் முக்கியமான கூட்டு நாடுகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக வெளியான 42 பக்கம் ரஷ்ய வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போருக்குப் பின்னரும் இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவுடன் ராணுவ ரீதியாகவும் அரசு முறையாகவும் உறவுகளை தொடர்ந்து வருகின்றன. அரசியலின் 5 பெரும் தூண்களாகக் கருதப்படும் பாதுகாப்பு, சிவில் அணுசக்தி, தீவிரவாத எதிர்ப்பு, விண்வெளி ஆய்வு மற்றும் அரசியல் உறவுகளில் இந்தியாவும் ரஷ்யாவும் ஒத்துழைப்பு நல்கி வருகின. … Read more

இன்னும் 7 ஆண்டுகளில் மனிதர்கள் சாகா வரம் பெறுவர்: முக்கிய விஞ்ஞானி கணிப்பு

இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவார்கள் என கூகுள் நிறுவன முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல் தமது கணிப்பை வெளியிட்டுள்ளார். மனிதர்களை, கணினிகள் வெல்லும் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானியான 75 வயது ரே குர்ஸ்வேல் இதுவரை 147 முன் கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இவற்றில் 86 சதவீதம் சரியாக இருந்துள்ளது. 2000-ம் ஆண்டுக்குள் செஸ் போட்டியில் மனிதர்களை, கணினிகள் வெல்லும் என இவர் கடந்த 1990-ம் ஆண்டே கூறியிருந்தார். அதேபோல் … Read more

பொதட்டூர்பேட்டையில் பேரூராட்சி மன்றக்கூட்டம்

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பேரூராட்சி துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முன்னதாக பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் (பொ) வரவேற்றார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திடக்கழிவு திட்டத்தின்  கீழ் பயன்படுத்தப்பட்டு வரும் தள்ளுவண்டிகளுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து வாங்க தேவையான பிளாஸ்டிக் குப்பை தொட்டிகளை பொது நிதியிலிருந்து மேற்கொள்ள அனுமதி, … Read more