கொரோனாவுக்கு உலக அளவில் 6,831,495 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.31 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,831,495 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,927,093 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,833,589 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,884 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிசோடியா ஜாமீன் மனு தள்ளுபடி

புதுடெல்லி : டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து மார்ச் 9ம் தேதி அமலாக்கத்துறை சிசோடியாவை கைது செய்தது. இந்நிலையில் ஜாமீன் கேட்டு சிசோடியா தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 24ம் தேதி  சிசோடியா ஜாமீன் மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு … Read more

தேர்தல் பத்திர விற்பனை வரும் 3 முதல் அனுமதி| Sale of election bonds allowed from 3rd

புதுடில்லி, கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்கான தேர்தல் பத்திர விற்பனையை, நாளை மறுதினம் முதல் துவங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு நன்கொடை பெறுவதில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் நோக்கத்தில், தேர்தல் பத்திர விற்பனை திட்டத்தை, மத்திய அரசு 2018ல் அறிமுகப்படுத்தியது. நம் நாட்டைச் சேர்ந்த தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி, தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு அதை நன்கொடையாக … Read more

நடிகையால் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பயங்கரமாக திட்டு வாங்கிய விஜய்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?

சென்னை: Sangavi About Vijay (விஜய் குறித்து சங்கவி பகிர்ந்த ரகசியம்) – நடிகை சங்கவியால் விஷ்ணு பட ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கடுமையாக திட்டு வாங்கினாராம். இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அப்படி பிரபலமான இயக்குநரின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜய். இதனால் அவருக்கு திரைத்துறைக்குள் நுழைவதற்கான கதவு எளிதாக திறந்தது. ஆனால் திறமை என்ற ஒன்று இல்லாமல் இன்று அவர் இந்தியாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக … Read more

புதுக்கோட்டை : பல்கலைக்கழக விடுதி மாடியில் இருந்து விழுந்து கல்லூரி மாணவி உயிரிழப்பு.!

பல்கலைக்கழக விடுதி மாடியில் இருந்து விழுந்து கல்லூரி மாணவி உயிரிழப்பு.! தேனி மாவட்டத்தில் உள்ள குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன் மகள் மகேஸ்வரி. இவர் புதுக்கோட்டை அருகே உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், மகேஸ்வரி நேற்று முன்தினம் இரவு விடுதியின் மாடியில்  செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.  அப்போது திடீரென மரக்கிளைகள் ஒடிந்து விழும் சத்தமும் அலறி துடிப்பது போன்ற சத்தமும் கேட்டதால், விடுதியில் இருந்த சக … Read more

இன்று முதல் அதிகரிக்கும் குறையும் பொருட்கள்.. முழு லிஸ்ட் ஒர் பார்வை..!

2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பல்வேறு பொருட்களுக்கு வரி திருத்தம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.  இதன் மூலம் சில குறிப்பிட்ட பொருட்கள் ஏப்ரல் 1 முதல் விலை உயர்ந்தாலும், சில பொருட்களின் விலை மலிவாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்று முதல் மலிவாகவும், விலை உயர்வு பெறும் பொருட்களைப் பற்றி இனி காண்போம். விலை உயரப்போகும் பொருட்கள் தங்க நகைகள் சிகரெட் வெள்ளி பாத்திரங்கள் பிளாட்டினம் கிட்சனில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் சிம்னி வைட்டமின்கள் உயர் … Read more

இன்று முதல் வருமான வரி விதிப்பில் முக்கிய மாற்றம்..!!

பட்ஜெட்டில் புதிய நிதியாண்டுக்கான வருமான வரி சார்ந்த பல்வேறு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த வருமான வரி விதிமுறைகள் இன்று ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. புதிய வருமான வரி முறையில் வருமான வரி உச்சவரம்பு 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, புதிய வருமான வரி முறையை தேர்வு செய்வோர், ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டினால் அவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. புதிய வருமான வரி முறையில் … Read more

மாநில அந்தஸ்து வழங்கக் கோரி புதுச்சேரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா, திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், நேரு (ரங்கசாமி ஆதரவு சுயேச்சை) ஆகியோர் நேற்று தீர்மானம் கொண்டுவந்தனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசும்போது, “கடந்த 36 ஆண்டுகளில், 13 முறை மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், மத்திய அரசு நிராகரித்து வந்துள்ளது. மக்கள் பிரதிநிதிகளான முதல்வர், அமைச்சர்கள் முடிவு எடுக்காமல், தலைமைச் … Read more