கிருஷ்ணகிரி சாமந்த மலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெருமாள் (58) என்பவரை யானைகள் தந்தத்தால் குத்தியது. பலத்த காயமடைந்த அவரை, பொதுமக்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் உயிரிழந்தார். சாமந்த மலை கிராமத்தின் அருகே முகாமிட்டுள்ள இந்த யானைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில்.மக்களுக்கு வனத்துறை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.யானை தாக்கி விவசாயி உயிரிழந்த நிலையில் இரவில் வீட்டை விட்டு வெளியே வர கூடாது. விவசாய நிலங்களுக்கு காவலுக்கு செல்ல கூடாது. அதிகாலையில் விவசாயி நிலங்களுக்கு செல்வோர் யானை நடமாட்டம் இருப்பதை அறிந்து கொண்டு செல்ல வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.