மாஸ்கோ : ரஷ்யாவில் கட்டாய ராணுவ சேவைக்கான வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் ஆண்கள் குறைந்தபட்சம் சில ஆண்டுகள் ராணுவத்தில் கட்டாயம் சேவை செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இதன்படி ரஷ்யாவில் 18 – 27 வயதுக்குள் உள்ள ஆண்கள் குறைந்தது ஒரு ஆண்டாவது கட்டாயம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.
தற்போது உக்ரைனுடன் நடந்து வரும் போர் காரணமாக இந்த வயது வரம்பை அதிகரிக்க ரஷ்ய அரசு முடிவு செய்தது. இதன்படி ஏற்கனவே உள்ள வயது வரம்பு தற்போது 18 – 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரஷ்ய பார்லிமென்டின் கீழ் சபை நேற்று ஒப்புதல் அளித்தது.
இதன்படி அடுத்தாண்டு ஜனவரி முதல் இந்த வயதுக்குள் உள்ள ஆண்கள் கட்டாயம் ஒரு ஆண்டு ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். ராணுவ சேவைக்கான அழைப்பு அரசிடமிருந்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வந்தால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாது. ரஷ்ய அதிபர் புடின் கையெழுத்திட்டபின் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement