Apples exclusive shoe auctioned for Rs.41 lakh | ஆப்பிளின் பிரத்யேக ஷூ ரூ.41 லட்சத்துக்கு ஏலம்

வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனம் முன்னர் தனது பணியாளர்களுக்காக தயாரித்த ஒரு ஜோடி ஷூ தற்போது ஏலத்தில் ரூ.41 லட்சத்திற்கு விற்பனைக்கு வந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், ஐபேட், ஐபோன், ஐமேக் என பல பொருட்களை விற்பனை செய்கிறது. ஆப்பிள் நிறுவன தயாரிப்புக்கென உலகம் முழுவதும் ரசிகர்கள்உள்ளனர்.

ஆப்பிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்காக பிரத்யேகமாக ஷூக்களை தயாரித்தது. 1990ம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு ஜோடி ஷூ தற்போது பிரபல சோத்பைஸ் இணையதளத்தில் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் அரிய தயாரிப்பான ஒரு ஜோடி ஷூக்கு 50,000 அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.41 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க காலணி அளவான 10.5 சைஸில் உள்ளது.

ஏல விற்பனை இணையதளத்தில் ”மேல்புறம் முழுவதும் வெள்ளை நிறம், ஆப்பிளின் பழைய ரெயின்போ லோகோ. தனித்துவமிக்க, இதுவரை பொது மக்களை சென்றடையாத இந்த குறிப்பிட்ட ஜோடி ஸ்னீக்கர்கள் மிகவும் விரும்பப்படும் ஒன்றாகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.