Former US Secretary of State Henry Kissinger dies at 100 | அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்ரி கிசிஞ்சர் 100 வயதில் மரணம்

வாஷிங்டன், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது, இந்தியாவுடனான உறவை இகழ்ந்து பேசிய, அதே நேரத்தில், நரேந்திர மோடி பிரதமரானப் பின், இந்தியாவுடனான நல்லுறவு குறித்து வலியுறுத்திய, ஹென்ரி கிசிஞ்சர், 100, உயிரிழந்தார். குடியுரிமை அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை வடிவமைத்தவர் என்ற பெருமையை பெற்றவர், ஹென்ரி கிசிஞ்சர். கடந்த, 1970களில், இரண்டு அதிபர்கள் கீழ் பணியாற்றிய அவர், சர்வதேச அளவில் பல பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டவர். இந்நிலையில், அவர் நேற்று உயிரிழந்ததாக, அவருடைய அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ஆனால், … Read more

Blue Sattai Maran: எத்தனை கோடி கொடுத்தாலும்.. ரிஷப் ஷெட்டி குறித்த ப்ளூ சட்டை மாறன் பதிவு!

பெங்களூர்: நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான காந்தாரா படம் மிகப்பெரிய பாராட்டுக்களையும் வசூலையும் குவித்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான பூஜை கடந்த இரு தினங்களுக்கு முன்பு போடப்பட்டது. காந்தாரா படத்தின் முன்கதையாக படத்தின் இரண்டாவது பாகம் உருவாக்கப்பட உள்ளதாக ரிஷப் ஷெட்டி முன்னதாக பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

Exit Poll: `காங்கிரஸிடமிருந்து நழுவுகிறதா ராஜஸ்தான்?’ – தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Times Now – ETG ராஜஸ்தான் (199 தொகுதிகள்) காங்கிரஸ் – 56 முதல் 72 பாஜக – 108 முதல் 128 மற்றவை – 0 சத்தீஸ்கர் (90 தொகுதிகள்) காங்கிரஸ் – 48 முதல் 56 பாஜக – 32 முதல் 40 மற்றவை – 0 மிசோரம் (40 தொகுதிகள்) மிசோ தேசிய முன்னணி – 14 முதல் 18 ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) – 10 முதல் 14 காங்கிரஸ் … Read more

ஈரோட்டில் பேருந்துகள் மோதி விபத்து: 30-க்கும் மேற்பட்டோர் காயம்

ஈரோடு: ஈரோடு அருகே தனியார் பனியன் நிறுவன ஊழியர்களுடன் சென்ற பேருந்து மீது, அரசு பேருந்து மோதியதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனத்தை சேர்ந்த பேருந்து, பணியாளர்களை ஏற்றிக் கொண்டு, வியாழக்கிழமை இரவு 9 மணியளவில், ஈரோடு நோக்கி சென்று கொண்டு இருந்தது. அந்த பேருந்தை தொடர்ந்து அதே நிறுவனத்தை சேர்ந்த மற்றொரு பேருந்தும், திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசு பேருந்தும் வந்து கொண்டு … Read more

ஏர் இந்தியா விமானத்துக்குள் கொட்டிய தண்ணீர் – வீடியோ வைரல்

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்துக்குள் விமான இருக்கைகளுக்கு நடுவே மழைநீர் கொட்டியது போன்ற வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர். பொதுவாகவே மழைக்காலங்களில் அரசுப் பேருந்துக்குள்தான் மழை பெய்யும். ஆனால், சற்று வித்தியாசமாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஏர் இந்தியா விமானத்துக்குள் விமான இருக்கைகளுக்கு நடுவே மழைநீர் கொட்டியது போன்ற வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விடியோவில், இருபக்கமும் பயணிகள் அமரக்கூடிய இருக்கைகளுக்கு நடுப்பகுதி முழுவதும் … Read more

IND vs SA: தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! மூன்று கேப்டன்

தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: இந்திய அணி டிசம்பர் 10 ஆம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் பட்டியலை இன்று (நவம்பர் 30, வியாழக்கிழமை) மாலை பிசிசிஐ (Board of Control for Cricket in India) அறிவித்தது. இதில் முக்கியமான விசியம் என்னவென்றால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஒவ்வொரு ஃபார்மட்டிற்கும் இந்திய அணிக்கு வெவ்வேறு கேப்டன் … Read more

நிவாரணப்பணிகளை அனைத்து துறைகளும் இணைந்து மேற்கொள்ள முதல்வர் உத்தரவு

சென்னை நிவாரணப்பணிகளை அனைத்து துறைகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நேற்று முதல் தற்போது வரை சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.  இதனால் மக்கள் அவதியடைந்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  சென்னை மாநகராட்சி மழை குறித்த புகார்கள் அளிக்க கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர … Read more

Army Council approves purchase of 97 more Tejas aircraft | 97 தேஜஸ் விமானங்கள் வாங்க ராணுவ கவுன்சில் அனுமதி

புதுடில்லி :நம் ராணுவத்தின் பலத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக கூடுதலாக, 97 தேஜஸ் போர் விமானங்கள் மற்றும் 156 பிரசந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு ராணுவ கொள்முதல் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது-. மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டம் புதுடில்லியில் நேற்று நடந்தது. அப்போது நம் ராணுவத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் 1.1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் கூடுதலாக 97 தேஜஸ் போர் விமானங்கள் மற்றும் 156 பிரசந்த் … Read more

உண்மையை படமாக்குவது சவால்: தி கோட் லைப் இயக்குனர் பிளெஸ்ஸி

பிருத்விராஜ் நடித்துள்ள படம் 'ஆடுஜீவிதம்'. சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகி இருக்கும் இந்த படம் உலகம் முழுவதும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விஷுவல் ரொமான்ஸ் தயாரிப்பில், தேசிய விருது வென்ற பிளெஸ்ஸி இயக்கியுள்ள இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், அமலா பால், கே.ஆர்.கோகுல் மற்றும் பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக்காபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். ரசூல் பூக்குட்டி … Read more

world Aids | உலக எய்ட்ஸ் தினம்

உலகில் 2022 கணக்கின்படி, 4 கோடி பேர் எய்ட்ஸ் பாதிப்புடன் வாழ்கின்றனர். இதில் 2022ல் மட்டும் 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 6.30 லட்சம் பேர் பலியாகினர். எய்ட்ஸ் பாதிப்பு, தடுக்கும் முறை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டிச. 1ல் உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது எச்.ஐ.வி., வைரசால் ஏற்படுகிறது. ‘சமூகம் வழிநடத்தட்டும்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. 1988ல் எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. உலக அளவில் சுகாதார அச்சுறுத்தலாக எய்ட்ஸ் இருப்பதை 2030க்குள் முடிவுக்கு … Read more