"தமிழில் என்னை விஜயகாந்த் சார்தான் அறிமுகப்படுத்தினார்!" – தழுதழுத்த குரலில் பேசிய நடிகை நமீதா

விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் `எங்கள் அண்ணா’. விஜயகாந்த் – வடிவேலு காமெடி கூட்டணி ஹிட்டான படங்களில் இதுவும் ஒன்று. இந்தத் திரைப்படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை நமீதா. அவர் குறித்த நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார் நமீதா.

நமீதா

“அவர் இறந்த செய்தி கேட்டதும் ஷாக் ஆகிட்டேன். என்னால நம்பவே முடியல. துளி அளவும் எனக்கு நம்பிக்கை இல்ல. அதனால என் மேனேஜருக்கு போன் பண்ணி டபுள் செக் பண்ணச் சொல்லிக் கேட்டேன். ‘இது நிஜமா, நிஜமா?’ன்னு தான் கேட்டுட்டே இருந்தேன். எங்க வீட்ல வேலை பார்க்கிறவங்க என்கிட்ட, ‘அக்கா உங்களுக்குத் தெரியுமா? அவர் நடிகர் மட்டும் கிடையாது. பலருக்கு உதவியிருக்காரு’ன்னு சொன்னாங்க. அந்த அளவுக்கு அவரோட ரீச் இருக்கு. அவரோட இறப்பு எங்க எல்லாருக்கும் ரொம்பவே அதிர்ச்சியா இருந்தது. மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.

அவர் எப்பவும் நேரம் தவறாதவர் மற்றும் பண்பானவர். செட்டிற்கு ஷார்ப் ஆக சொன்ன டைமுக்கு வந்திடுவார். எல்லாருக்கும் மரியாதை கொடுப்பார். அவர்கிட்ட நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். தமிழில் என் முதல் திரைப்படம் அவரோடுதான். அவர்தான் என்னை அறிமுகப்படுத்தினார் என்றே சொல்லலாம். அந்த செட்ல யாரும் என்னை நியூ கம்மர் ஆக ட்ரீட் பண்ணல. டைரக்டர் சித்திக், கேப்டனுடைய சப்போர்ட் இல்லைன்னா அந்த ஷூட்டிங்ல ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பேன். 

Vijayakanth | விஜயகாந்த்

இந்த வருஷம்தான் டைரக்டர் சித்திக்கும் இயற்கை எய்தினார். இப்ப கேப்டனும் இல்ல. என் முதல் படத்துடைய இரண்டு தூண்களும் இல்லைங்கிறது என் இதயத்தை கணக்கச் செய்கிறது. கேப்டனுடைய குணத்தைப் பக்கத்திலிருந்து பார்த்து வியந்திருக்கேன். இன்னைக்கு அவர் இல்லைங்கிறது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கு!” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.