இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது : ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சீறிய சமுத்திரக்கனி

பருத்திவீரன் பட விவகாரத்தில் இயக்குனர் அமீர் குறித்து ஞானவேல்ராஜா சொன்ன கருத்தினால் அவருக்கு எதிராக திரையுலகை சார்ந்த பாரதிராஜா, சமுத்திரக்கனி, சசிகுமார் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் ஞானவேல்ராஜா. ஆனால் அதையடுத்தும் அவர் வருத்தம் தெரிவித்ததற்கு எதிராக இயக்குனர் சசிகுமார் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது சமுத்திரக்கனியும், ஞானவேல் ராஜாவுக்கு எதிராக மீண்டும் எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். … Read more

Rajini – அவர் என்னை அறிமுகப்படுத்தியவர்.. அவங்க கம்பெனில எப்படி அத கேக்குறது?.. ரஜினி செய்த நெகிழ்ச்சி செயல்

சென்னை: Rajini (ரஜினி) இயக்குநர் கே.பாலசந்தரின் கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ்காக ரஜினிகாந்த் செய்த செயல் ஒன்று தெரியவந்திருக்கிறது. ரஜினிகாந்த்தும் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே ரசிகராக இருக்கிறது. ரொம்பவே கஷ்டப்பட்டு சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவருக்கு பலமே அவருடைய எளிமையும், நன்றி மறக்காத குணமும்தான் என்று திரைத்துறையினரே கூறுவார்கள். வாலிகூட குசேலன் படத்தில், ‘அவர் உருவம் பாரு

சத்தீஷ்காரில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? வெளியானது கருத்து கணிப்பு..!

ராய்ப்பூர், மத்தியப் பிரதேசத்தில் இருந்து பிரிந்து கடந்த 2000 -ஆம் ஆண்டு சத்தீஷ்கார் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. இங்கு முதல் மாநில சட்டசபை தேர்தல் 2003-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பாஜக 50 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. காங்கிரஸ் அந்த தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியானது. மற்ற கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றன. பின்னர் 2008 சட்டமன்ற தேர்தலிலும் இதே நிலைதான் தொடர்ந்தது. அப்போதும் பாஜக 50 இடங்களில் வென்றது. காங்கிரஸ் … Read more

சாண்டோ அபார சதம்: 3-வது நாள் முடிவில் வங்காளதேச அணி 212 ரன்கள் குவிப்பு

டாக்கா, நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 28-ந் தேதி தொடங்கியது இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இதனையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. வில்லியம்சனின் சதம் மூலம் … Read more

உலகின் சோகமான யானை என்று அழைக்கப்படும் 'மாலி' என்ற யானை உயிரிழப்பு

மணிலா, விலங்குகள் நல ஆர்வலர்களால் “உலகின் சோகமான” (World’s ‘saddest’ elephant) யானை என பெயரிடப்பட்ட “மாலி” எனப்படும் யானை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மாலி பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் உயிரிழந்துள்ள நிலையில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தனியாகவே கழித்துள்ளதாம். ‘மணிலா’ மிருகக்காட்சிசாலையில் நான்கு தசாப்தங்களாக இருந்து வரும் மாலியை மிகவும் நேசித்தவர்களிடமிருந்து அஞ்சலிகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மாலியின் மரணம் குறித்து மணிலாவின் மேயர் பேஸ்புக் காணொளியில் … Read more

உலக எய்ட்ஸ் தின அணிவகுப்பு…

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு இன்று (டிசம்பர் 01) காலை 09.00 மணிக்கு கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இருந்து எயிட்ஸ் தின நடைபவனி இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த அணிவகுப்பு நாளை காலை 08.00 மணிக்கு ஹைட்பார்க் மைதானத்தில் இருந்து ஆரம்பமாகி பொதுமக்களுக்கு அறிவித்து புஞ்சி பொரளை, மருதானை வழியாக ஹைட்பார்க் மைதானத்திற்கு திரும்ப உள்ளது. உலக எயிட்ஸ் தின அணிவகுப்பில் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், முப்படையினர், சிறைச்சாலை அதிகாரிகள், கொழும்பு மாநகர சபையை … Read more

“இந்த மழைக்கே இந்த நிலை என்றால்…” – சென்னை மழைநீர் தேக்கம் குறித்து ஓபிஎஸ் சாடல்

சென்னை: “இந்த மழைக்கே இந்த நிலை என்றால், ‘மிக்ஜாம்’ புயல் சென்னையை கடக்கும்போது நிலைமை எப்படி இருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே தற்போது எழுந்துள்ளது. இதிலிருந்து, திமுக அரசால் மழைநீர் வடிகால் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்ற நிலையில், சாலைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினை அகற்ற அரசு … Read more

மக்கள் மருந்தகம் எண்ணிக்கை 25,000 ஆக அதிகரிக்கிறது: திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: நாடு முழுவதிலும் மக்கள் மருந்தகம் எண்ணிக்கையை 10,000-ல்இருந்து, 25,000 ஆக உயர்த்தும் திட்டம், மகளிர் ட்ரோன் திட்டம் ஆகியவற்றை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மத்திய அரசின் முன்னணி திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், அவற்றை மேலும் செறிவூட்டும் நோக்கில் ‘வளர்ந்த இந்தியா சபத யாத்திரை’ (விக்‌ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா) நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசு திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி நேற்று … Read more