தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

புதுடெல்லி, இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான … Read more

சிறந்த கிரகத்தை உருவாக்கும் நோக்கில் நடைபெறும் உச்சிமாநாட்டின் நடவடிக்கைகளை எதிர்நோக்குகிறோம் – பிரதமர் மோடி

துபாய், உலக அளவில் பருவநிலை மாறுபாடு சவால்களில் தீர்வுகளை காண்பதற்காக ஆண்டுதோறும் ஐ.நா.வின் சார்பில் உச்சி மாநாடு உறுப்பு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று துபாய் எக்ஸ்போ நகர வளாகத்தில் காப்-28 உலக பருவநிலை உச்சி மாநாடு கோலாகலமாக தொடங்கியது. இந்த மாநாட்டை அமீரக மந்திரியும், காப்-28 மாநாட்டின் தலைவருமான டாக்டர் சுல்தான் ஜாபர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஐ.நா உச்சி மாநாட்டு வளாகத்தின் நீல மண்டலத்தில் பல்வேறு நாடுகளின் கண்காட்சி அரங்குகள் … Read more

2024ம் ஆண்டை உற்பத்தி விளைச்சலை அதிகரிக்கும் ஆண்டாகக் கருதி செயற்படுவோம்… – பிரதமர் தினேஷ் குணவர்தன

மஹரகம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 2023.11.29 அன்று மஹரகம பிரதேச செயலகத்தில் குழுவின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் நடைபெற்றது. எதிர்வரும் 2024ஆம் ஆண்டு உற்பத்தி விளைச்சலை அதிகரிக்கும் ஆண்டாகக் கருதப்படுவதால், அது தொடர்பான திட்டங்களைச் செயற்படுத்துமாறு கமநலச் சேவைகள் உதவி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை வழங்கினார். குறிப்பாக உணவுப் பயிர்கள் மற்றும் ஏற்றுமதி பயிர்கள் மீது அதிக கவனம் செலுத்துவது குறித்தும் பிரதமர் வலியுறுத்தினார். சட்டவிரோதமாக வயற்காணிகளை நிரப்புதல் தொடர்பான … Read more

December Month Rasi Palan | டிசம்பர் மாத ராசி பலன்கள்… பரிகாரங்கள் | ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்

டிசம்பர் மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படிப்பட்ட பலன்கள் உண்டாகும் என்பதையும் அவர்களுக்கான பரிகாரங்களையும் கணித்துச் சொல்கிறார் பாரதி ஶ்ரீதர். Source link

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா: டிச.14-ம் தேதி தொடங்குகிறது

சென்னை: இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பு ஆண்டுதோறும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. தமிழக அரசின் ஆதரவுடன்நடக்கும் இந்த விழாவில் பல்வேறு நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படும். இந்த ஆண்டுக்கான, 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிச.14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பின் பொதுச் செயலாளரும், திரைப்பட விழா இயக்குநருமான தங்கராஜ் கூறியதாவது: 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் … Read more

திரிணமூல் எம்எல்ஏ, கவுன்சிலர் வீடுகளில் சிபிஐ சோதனை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ, 2 கவுன்சிலர் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டோம்கால் தொகுதி எம்எல்ஏ ஜஃபிகுல் இஸ்லாம், கொல்கத்தா மாநகராட்சி கவுன்சிலர் பபாதித்யா தாஸ்குப்தா, பிதான்நகர் மாநகராட்சி கவுன்சிலர் தேப்ராஜ் சக்ரவர்த்தி … Read more

நித்தியானந்தாவின் கைலாசாவுடன் ஒப்பந்தம் செய்த பராகுவே அமைச்சரின் பதவி பறிப்பு

அசுன்சியோன்: நித்தியானந்தாவின் ‘கைலாசா’ கற்பனை தேசத்துடன் ஒப்பந்தம் செய்த பராகுவே வேளாண் துறை அமைச்சர் அர்னால்டோ சாமோராவின் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தாவுக்கு (45) தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமங்கள் உள்ளன. கர்நாடகாவின் பிடதியில் 200 ஏக்கர் பரப்பில் அவரது தலைமை பீடம் செயல்படுகிறது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் அவருக்கு பல்வேறு ஆசிரமங்கள் உள்ளன. பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல், பண மோசடி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய அவர் கடந்த … Read more

‘Animal’ படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

Animal Twitter Review: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் அனிமல் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம் என்ன தெரியுமா? 

2 கோடி மகளிரை லட்சாதிபதி ஆக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக 15000 மகளிருக்கு ட்ரான் வழங்கும் திட்டத்தை தொடங்கினார் மோடி

மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் இந்தியா முழுவதும் சுமார் 15000 மகளிருக்கு அடுத்த 3 ஆண்டுகளில் ட்ரான் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு சுதந்திர தின உரையில் 2 கோடி மகளிரை லட்சாதிபதி ஆக்கும் திட்டத்துடன் பாஜக அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில் அதன் ஒரு கட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. ட்ரான் மூலம் தங்கள் வாழ்வாதாரத்துக்கு தேவையான வருமானத்தை ஈட்ட ‘பிரதம மந்திரியின் … Read more

5 people died in Gujarat after drinking ayurvedic syrup | ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் குஜராத்தில் பலி

நாடியாட், குஜராத்தில், கெட்டுப்போன ஆயுர்வேத ‘சிரப்’ குடித்த ஐந்து பேர் கடந்த இரண்டு நாட்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தின் நாடியாட் நகர் அருகேயுள்ள பிலோடாரா கிராமத்தைச் சேர்ந்த கடைக்காரர் ஒருவர், ஆயுர்வேத சிரப் எனப்படும் திரவ மருந்து விற்பனை செய்து வருகிறார். ‘கால்மேகசப் – ஆசவா அரிஷ்டா’ என்ற பெயரிலான அந்த ஆயுர்வேத சிரப்பை அவர் 50க்கும் மேற்பட்டோருக்கு விற்பனை செய்துள்ளார். இதை குடித்த ஐந்து பேர் கடந்த இரண்டு … Read more