`புறநானூறு’ படம் தொடர்பான அப்டேட்டை நடிகர் சூர்யா அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் ‘கங்குவா’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதன் டீசர் இன்று மாலை வெளியாகிறது. ‘கங்குவா’விற்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் ‘புறநானூறு’ படத்தில் நடிக்க கமிட்டானார் சூர்யா. சூர்யாவின் 43வது படமான இதில், அவரோடு மிகவும் முக்கியமான கேரக்டர்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா இவர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைப்பதாக அறிவிப்புகளும் வெளியாகின.

2D தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி இருந்தாலும் படப்பிடிப்பு தொடங்காமலே இருந்தது. இந்நிலையில் ‘புறநானூறு’ தொடர்பான அப்டேட்டை சூர்யா ட்வீட் மூலம் பதிவிட்டிருக்கிறார். அதில், “’புறநானூறு’ படத்திற்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. இந்தப் படத்திற்காக இணைந்திருக்கும் கூட்டணி சிறப்பு வாய்ந்த ஒன்று.
.#Suriya43#Puranaanooru @Sudha_Kongara pic.twitter.com/sykK5N2Ibb
— Suriya Sivakumar (@Suriya_offl) March 18, 2024
இது எங்களின் மனதுக்கு நெருக்கமான படம். சிறந்த படைப்பை உங்களுக்கு வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். விரைவில் அடுத்தக்கட்ட ஷூட்டிங் பணிகள் தொடங்கப்படும். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று பதிவிட்டிருக்கிறார்.