‘ஒமர் அப்துல்லா பதிவு!’
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் எல்லாவற்றையும் முழுமையாக நிறுத்திக் கொள்வதாக இரு நாடுகளும் அறிவித்த நிலையில், மீண்டும் தாக்குதல் நடப்பதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ட்வீட் செய்திருக்கிறார்.

பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர் ஜெனரலின் அழைப்பையும் கோரிக்கையையும் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி என ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில், சில நிமிடங்களுக்கு முன்பு ஜம்மு & காஷ்மீரில் ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முற்படுவதாகவும், அதேமாதிரி, ராஜஸ்தானிலும் சில பகுதிகளில் மக்களுக்கு தாக்குதலுக்கு முந்தைய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இதனைத்தொடர்ந்து ஜம்மு & காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் இதைப் பற்றி ட்வீட் செய்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, ‘அமைதி ஒப்பந்தத்துக்கு என்ன ஆயிற்று? ஸ்ரீநகர் முழுவதும் குண்டு வெடிக்கும் சத்தங்கள் கேட்கிறது.’ எனக் கூறியிருக்கிறார்.