IRCTC SwaRail ஆப்.. ரயில் டிக்கெட் முன்பதிவு எப்படி செய்வது

IRCTC SwaRail app: நமது நாட்டின் உயிர்நாடியாக இந்திய ரயில்வே தற்போது இயங்கி வருகிறது. தினமும் கோடிக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதே நேரத்தில், பயணிகளின் வசதிக்காக ரயில்வே ஒவ்வொரு நாளும் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. அந்த வகையில் ஐஆர்சிடிசி பயணிகள் வசதிக்காக அனைத்து ரயில் சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஆப் மூலம் எளிதாக ரயில் டிக்கெட்டை புக் செய்துக் கொள்ளலாம்.

தற்போது நாம் ஐஆர்சிடிசி செயலி மற்றும் பிற மூன்றாம் தரப்பு செயலிகள் வாயிலாக ரயில் டிக்கெட்களை பதிவு செய்கிறோம். இந்நிலையில் தான் ஐஆர்சிடிசி தற்போது புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியின் பெயர் SwaRail ஆகும்.

இந்த செயலியை ஆண்டிராய்ட் மற்றும் ஐஓஎஸ் கருவிகளில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்தியாவின் Center For Railway System என்ற அமைப்பு இந்த செயலியை உருவாக்கி இருக்கிறது. இந்த செயலியில் ரயில் டிக்கெட் முன்பதிவு, ரியல் டைம் ட்ராக்கிங், பிஎன்ஆர் செக் செய்வது, உணவு ஆர்டர் செய்வது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற்றுக்கொள்ளலாம்.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய SwaRail செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளவும்.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய SwaRail செயலியை டவுன்லோட் செய்யவும். இதில் ஐஆர்சிடி பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிடவும். இந்த செயலியில் லாகின் செய்த பிறகு, ‘Journey Planner’ என்ற பிரிவில் ‘Reserved’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இதில் புறப்படும் ரயில் நிலையம், செல்ல வேண்டிய ரயில் நிலையம் ஆகியவற்றின் பெயர்களை உள்ளிட வேண்டும், பயண தேதி, எந்த வகையான இருக்கை ஆகியவற்றை தேர்வு செய்து ‘Search’ கொடுக்க வேண்டும். அதில் தேர்வு செய்த தேதியில் அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்களின் பட்டியல் காட்டும். அதில் விருப்பமானதை தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர் பயணியின் தகவல்களை உள்ளிட வேண்டும். ‘Review Journey Details’ என்பதை கிளிக் செய்து அனைத்து தகவல்களும் சரியாக இருக்கிறதா என்பதை சரிப்பாக்கவும்.

இதனை அடுத்து டிக்கெட் கட்டணத்தை செலுத்தும் பக்கம் வரும், அதில் ‘Book Now’ கொடுத்துவிட்டு, உங்களின் R-Wallet அல்லது UPI அல்லது credit/ debit கார்டுகள் அல்லது நெட் பேங்கிங் வாயிலாக டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்.

பின்னர் “My Bookings” என்பதை கிளிக் செய்தால் நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட் காண்பிக்கப்படும். இதனை நீங்கள் பிடிஎஃப் முறையில் பகிரவும் முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.