உளவு பார்க்க இந்திய யூடியூபர்களை வளைத்து போட்ட பாக். முன்னாள் எஸ்.ஐ. – விசாரணையில் திடுக்கிடும் தகவல்

புதுடெல்லி: ​பாகிஸ்​தானுக்கு உளவு பார்த்த குற்​றத்​துக்​காக பிரபல யூடியூபர் ஜோதி மல்​கோத்​ராவை, ஹரி​யானா போலீ​ஸார் சமீபத்​தில் கைது செய்​தனர்.

கடந்த வாரம் மற்​றொரு யூடியூபர் ஜஸ்​பிர் சிங் என்​பவர் கைது செய்​யப்​பட்​டார். இரு​வரும் இந்​தி​யா​வின் ராணுவ முகாம்​கள், நடமாட்​டங்​கள் குறித்த தகவல்​களை பாகிஸ்​தானின் உளவு அமைப்​பான ஐஎஸ்​ஐ.க்கு பகிர்ந்​தது தெரிய வந்​துள்​ளது. மேலும், டெல்​லி​யில் உள்ள பாகிஸ்​தான் தூதரக அதி​காரி டேனிஷ் என்​பவருடன் தொடர்​பில் இருந்​ததும், அவரது அழைப்​பின் பேரில் பாகிஸ்​தானுக்கு பல முறை சென்று வந்​ததும் அங்கு பாகிஸ்​தான் ராணுவம், ஐஎஸ்ஐ அதி​காரி​களை சந்​தித்​ததும் கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதையடுத்து அதி​காரி டேனிஷ் இந்​தி​யா​வில் இருந்து கடந்த மாதம் வெளி​யேற்​றப்​பட்​டார்.

இந்​நிலை​யில்​,ஜோதி மல்​கோத்​ரா, ஜஸ்​பிர் சிங் ஆகிய இரு​வரிட​மும் தீவிர விசா​ரணை நடத்​திய போது நசிர் என்​பவரின் பெயர் தெரிய வந்​தது. இவர் பாகிஸ்​தானில் சப் இன்​ஸ்​பெக்​ட​ராக பணி​யாற்றி விருப்ப ஓய்வு பெற்​றுள்​ளார். பின்​னர் யூடியூப் சேனல் தொடங்கி பிரபல​மாகி உள்​ளார். அத்​துடன் பாகிஸ்​தானின் பைசலா​பாத்​தில் டிராவல் ஏஜென்​சி​யும் நடத்தி வரு​கிறார். அத்​துடன் ரியல் எஸ்​டேட் தொழிலிலும் உள்​ளார். பாகிஸ்​தானில் உள்ள உறவினர்​களை சந்​திக்கஇந்​தி​யர்களுக்கு தாராள​மாக விசா வழங்க வேண்​டும் என்று தனது யூடியூப் சேனலில் நசீர் வலி​யுறுத்தி வந்​துள்​ளார்.

அப்​போது​தான், இந்​திய யூடியூபர்​களை வளைத்து போட நசீர், அவரது தோழி நவுஷபா செஷாத் ஆகியோ​ருக்கு ஐஎஸ்ஐ பணி வழங்கி உள்​ளது. அதன்​படி, இந்​திய யூடியூபர்​களு​டன் தொடர்பு ஏற்​படுத்​திக் கொண்டு அவர்​கள் மூலம் ஐஎஸ்​ஐ.க்கு உளவு பார்க்க வைத்​துள்​ளனர். அதற்​காக இந்​தி​யா​வில் உள்ள பாகிஸ்​தான் தூதரகத்​தின் மூலம் அவர்​கள் பாகிஸ்​தானுக்கு வரவழைக்​கப்​படு​கின்​றனர்.

அங்கு அவர்​கள் தங்​கு​வதற்கு 5 நட்​சத்​திர ஓட்​டல் உட்பட பல்​வேறு வசதி​களை நசீர் ஏற்​படுத்தி தந்​துள்​ளார். பின்​னர் பாகிஸ்​தானுக்கு ஆதர​வான வீடியோக்​களை எடுத்​து தங்​களது யூடியூப்​ சேனலில்​ இந்​திய யூடியூபர்​கள்​ வெளி​யிட்​டது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.