ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் காத்மாண்டு விமான நிலையத்தில் கைது!

நேபாள கிரிக்கெட் அணிக்காக இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியவர் சந்தீப் லமிச்சனே. இவர், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார். கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடினார்.

இந்த நிலையில் தான் சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நண்பர் ஒருவர் மூலம் சந்தீப்பின் அறிமுகம் தமக்கு கிடைத்ததாகவும், இதனை அடுத்து ஆகஸ்ட் 21ம் தேதி காத்மாண்டு ஹோட்டல் ஒன்றில் தம்மை சந்தீப் ரூமுக்கு அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து சந்தீப் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனை அடுத்து சந்தீப்க்கு காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து நேபாளம் கிரிக்கெட் வாரியம் சந்தீப் லமிச்சனேவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. முழு விசாரணை முடியும் வரை அவரை சஸ்பெண்ட் செய்தது. அவர் கடந்த மாதம் நேபாளத்தை விட்டு புறப்பட்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.சந்தீப் கரபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்று நாடு திரும்பப்படும் போது கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் தான் நேபாளம் திரும்பி விடுவேன் என்று அவர் கூறி இருந்தார். விசாரணையின் அனைத்து நிலைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன்.நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க சட்டப் போராட்டம் நடத்துவேன் என்றும் கூறி இருந்தார். இதனையடுத்து நேபாள அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே இன்று காலை காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். அதன் பின், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், அவர் உடனடியாக இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.