
குஜராத்தி இயக்குனர் பான் நீலன் இயக்கத்தில், பாவின் ரபாரி, பாவேஷ் ஸ்ரீமலி, ரிச்சா மீனா, தீபன் ராவல் உட்பட பலரின் நடிப்பில் உருவாகி அக்.14-ம் தேதி திரையில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘செல்லோ ஷோ’ (Chhello Show).
கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி இப்படம் Tribeca Film Festival-ல் ஒளிபரப்பப்பட்டது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ராகுல் கோலி (10) என்ற சிறுவன், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தான். சிறுவனின் மறைவு குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திரையில் வருவதற்கு முன்பே சாதனைகளை படைத்த ‘செல்லோ ஷோ’ படத்தின் வெளியீட்டுக்கு முன்பே சிறுவன் உயிரிழந்தான். சிறுவன் ராகுல் கோலியின் குடும்பம் ஏழ்மையானது. அவரின் தந்தை ரிக்சா ஓட்டுநர். இந்த படத்தின் வெளியீட்டுக்கு பின்னர் தங்களின் வாழ்க்கை மாறும் என்று அனைவரும் காத்திருந்த வேளையில், சிறுவனின் மரணம் நிகழ்ந்துள்ளது.
இந்த நிலையில், அக்டோபர் 14-ம் தேதி திரைப்படம் வெளியான பின்னரே சிறுவனின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அவரது பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.