
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் ராம்லீலா நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ராம் பிரசாத் என்பவர் சிவன் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக கலைஞர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராம் பிரசாத் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
‘ஊருக்காக ஆடும் கலைஞர் தன்னை மறப்பான்’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, அவர் கீழே விழுந்து சரியும் வரை நடனமாடி இருக்கிறார். நடனம் ஆடி கொண்டிருந்த போது மேடையிலேயே நடன கலைஞர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.