
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று முதல் வருகிற 23ஆம் தேதி வரை 3நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 6,300 பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக 4,218 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10,518 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்து இருந்தார்.
அதன்படி பேருந்துகளுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளிலும் டிக்கெட் முன்பதிவு பெரும்பாலும் முடிந்து விட்டது.

இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம், கே.கே நகர் மாநகர பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து பணிமனை ஆகிய 6 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதையொட்டி சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 1437 சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. நாளை வழக்கமான பேருந்துகளுடன் 1,586 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுநாள் வழக்கமான பேருந்துகளுடன் 1,195 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
newstm.in