தனது கலை இயக்கத்தின் மூலம் சமகால மற்றும் மன்னர் கால வாழ்வியலை ரசிகர்களின் கண்முன் கொண்டு வந்தவர் என ரசிகர்களால் பேசப்பட்ட திரைப்பட கலை இயக்குநர் சந்தானம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 50.
செல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தின் கலை இயக்குநராக பணியாற்றியவர் சந்தானம். அத்துடன் இவர், நடிகர் விஜய்யின் ‘சர்கார்’, ரஜினியின் ‘தர்பார்’ போன்ற படங்களிலும் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இதையடுத்து, ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில், கௌதம் கார்த்தி நடித்துள்ள ‘1947’ என்ற திரைப்படத்தில் கலை இயக்குநராக பணியாற்றினார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் தனது கலை இயக்கத்தின் மூலம் சமகால மற்றும் மன்னர் கால வாழ்வியலை ரசிகர்களின் கண்முன் கொண்டு வந்தவர் என ரசிகர்களால் பேசப்படுகிறது.
தமிழ்த் திரையுலகில் முன்னணி கலை இயக்குநர்களின் ஒருவராக வலம் வந்த சந்தானம், மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார். அவருடைய மரணத்திற்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.