டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இந்த நிலையில், பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை கடந்த வாரம் எலான் மஸ்க் தன் வசப்படுத்தினார்.
எலான் மஸ்க் ட்விட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது ட்விட்டர் இயக்குநர் குழுவை அதன் உரிமையாளரான எலான் மஸ்க் அதிரடியாக நீக்கியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உள்ள 9 பேரையும் ஒரே அறிவிப்பில் நீக்கி எலான் மஸ்க் அதிரடி காட்டியுள்ளார். ட்விட்டர் இயக்குநர் குழுவில் தற்போது தான் மட்டுமே இருப்பதாகவும், ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக தான் இருப்பதாகவும் எலான் மஸ்க் அறிவித்தார்.
இந்த நிலையில் ட்விட்டரில் 50 சதவீத ஊழியர்களை நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணியாளர்களின் எண்ணிகையை 75 சதவீதம் அளவிற்கு குறைக்கவும், மூன்று ஆண்டுகளில் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அதன்படி, தற்போது தற்போது சுமார் 7,500 ஊழியர்கள் ட்விட்டரில் பணிபுரிந்து வரும் நிலையில், அந்த எண்ணிக்கை 3,000 ஆக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டரில் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மெமோவின் படி, எந்தெந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை, டுவிட்டர் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.