டெல்லியில் அதிகரித்துள்ள வாகனங்களால் காற்று மாசுபாடு மோசமான நிலையை எட்டி வருகிறது. 450ஆக காற்று மாசின் அளவு பதிவாகியுள்ளது. இதனால் டெல்லியில் வசிக்கும் மக்களுக்கு நுரையீரல் மற்றும் சுவாசநோய் தொடர்பான உபாதை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் மாசு நிலை சீராகும் வரை டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று முதல் விடுமுறை அளிக்கப்படுகிறது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.