கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள ஆலூர் பகுதியைச் சேர்ந்தவர் அபின். இவரது மனைவி ஷெல்ஜா. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் 4 மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் இரவு குழந்தை ஹைசலுக்கு அவரது தாய் ஷெல்ஜா தாய்ப்பால் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் தாய் ஷெல்ஜா குழந்தையை எழுப்ப முயன்றார். ஆனால் குழந்தை அசைவின்றி மூச்சுப்பேச்சற்று இருந்துள்ளது. இதனால் பதறிப்போன பெற்றோர், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஹைசலை கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். தாய்ப்பால் குழந்தையின் சுவாசப்பாதையை அடைத்து மரணம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதை கேட்ட அதிர்ச்சி அடைத்தார் தாய் கதறி அழுதார். நான்கு மாதக்குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.