2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு 7 மணிக்கு மக்களின் தலையில் அந்த இடி விழுந்தது. 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் பிரதமர் மோடி. அதற்குப் பதிலாக புதிய 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கையினால் கருப்பு பணம் வெளியே வரும் என்றார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு பெரும் பதற்றம் அடைந்தது. தங்களிடம் வைத்திருக்கும் பணத்தை மாற்றுவதற்காக மக்கள் அங்கே இங்கே என்று அல்லாடிக் கொண்டிருந்தார்கள்.
இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருக்கிறார். நடை பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசினார் ராகுல் காந்தி. அப்போது பிரதமரை கடுமையாக விமர்சித்தவர், தனது மூன்று பில்லியனர் நண்பர்களுக்கு இந்தியாவில் பொருளாதாரத்தை ஏகபோக மாற்றுவது உறுதி செய்யவே பிரதமர் மேற்கொண்ட நடவடிக்கை தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கை. 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி எடுக்கப்பட்ட இந்த முடிவு விவசாயிகள் நடுத்தர வணிகர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்டு தாக்குதல் என்றார்.
பண மதிப்பிழப்பினால் கருப்பு பணம் வெளியே வரும் என்றார். கருப்பு பணம் வரவில்லை. வறுமைதான் வந்தது.என கூறினார்