
இன்று நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் முடிவு செய்திருந்தது.
இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளத்தின் பொது செயலாளர் வெங்கடாச்சலம் தெரிவிக்கையில், “வங்கி கிளைகளில் எங்கு கூடுதல் ஊழியர்கள் உள்ளார்கள் என்பதை பார்த்து, அவர்களை ஊழியர் பற்றாக்குறை உள்ள வங்கி கிளைகளுக்கு மாற்ற வேண்டும். இதன் காரணமாக அனைத்து வங்கி கிளைகளிலும் சமமான ஊழியர்கள் இருப்பார்கள். ஆனால், ஒரு சில வங்கிகள் ஒப்பந்தத்தை மீறி ஊழியர்களை தாங்கள் பணியாற்றும் ஒரு ஊரில் இருந்து வேறொரு ஊருக்கு பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். இது தொழிலாளர்கள் சட்டத்தை மீறும் செயல்.
சில வங்கிகள் பல்வேறு பணிகளுக்கு அயல்பணி நடவடிக்கை, பொதுமக்களிடம் வைப்புத்தொகை வசூலிக்கும் பணியில் ஈடுபட்ட 240 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. மேலும், அவர்களுக்கான எந்தவித இழப்பீட்டையும் அவர்கள் வழங்கவில்லை. எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில் வேலைநிறுத்தம் செய்வதற்காக வங்கி ஊழியர் சங்கம் சார்ப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு, கடந்த 5ம் தேதி மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதன்பின்னர், கடந்த 10ம் தேதி டெல்லியில் உள்ள தலைமை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் ஆணையருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், வங்கிகளின் நிர்வாக தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. இதனை தொடர்ந்து, தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையரின் கோரிக்கையை ஏற்று நேற்று வங்கிகள் கூட்டமைப்புடன் மீண்டும் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், ஏற்கனவே திட்டமிட்டப்படி வருகின்ற 19ம் தேதி நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டு உள்ளது.” என தெரிவித்தார்.
இந்த நிலையில் நாளை 3-வது சனிக்கிழமை என்பதால் வங்கியில் வேலை நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வங்கி வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசு அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்திற்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு உள்ளது இதனை அடுத்து நாளை நடைபெற இருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்