மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோல் பகுதியை சேர்ந்த ராம் பட்டேல் – சரஸ்வதி தம்பதிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அண்மையில் ஏற்பட்ட சண்டையை தொடர்ந்து இருவரும் பேசாமல் இருந்துள்ளனர்.
அப்போது மனைவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவத்தன்று ராம் பட்டேல் மனைவியை தனியாக காட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கோடாரியை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் மனைவி சம்ப இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மனைவியின் தலை மற்றும் உடல் பகுதியை வெட்டி காட்டிற்குள் புதைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், காட்டில் ஒரு பெண்ணின் ஆடை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மோப்ப நாயின் உதவியுடன் பெண்ணின் உடல்பாகங்களை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் அது சரஸ்வதியின் உடல் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரது கணவரான ராம் பட்டேலிடம் விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
newstm.in