தமிழ் திரையுலகில் நகைக்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. 2009-ல் வெளியான ‘யோகி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் சிரித்தால் ரசிப்பேன், தில்லாலங்கடி, பையா, மான் கராத்தே, காக்கி சட்டை, மெர்சல், கலகலப்பு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
தற்போது வாரிசு, ஜவான், ஜெய்லர் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், உர்பேசர் ஸ்மித் நிறுவனம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக குறும்படம் தயாரிக்கப்படுகிறது.
அதில் யோகிபாபு தூய்மை பணியாளராக நடிக்கிறார். பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்க வேண்டுமென்பதற்கும், சுற்றத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்பதையும் வலியுறுத்துவிதமாக இந்தப் படம் தயாரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்களுக்கு அவசியமான குறும்படத்தில் யோகிபாபு நடிப்பதை அடுத்து அவருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர். மேலும் அந்தக் குறும்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைபப்டங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.