
ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் வசித்து வரும் அஜய்குமார் மண்டல் (26) என்பவர் ஒரிசா மாநிலம் இந்தபூர் பகுதியைச் சேர்ந்தவர்.
அவரது மனைவி பந்தனாமாஜி (22) ராஜபாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தார். அஜய்குமாரின் மனைவி அவ்வப்போது ரம்மி விளையாடி அதிக அளவு பணத்தை இழந்து வந்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டை கைவிடும்படி அஜய்குமார் மனைவியிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக அடிக்கடி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அஜய்குமாரின் மனைவி பந்தனாமாஜி ஆன்லைன் ரம்மியால் 70 ஆயிரம் ரூபாய் வரை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட சண்டையில் மனைமுடைந்த பந்தனாமாஜி துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கணவன் அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in