தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 பதவிக்கான முதல்நிலை போட்டி தேர்வின் உத்தேச விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை போட்டி தேர்வு கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. விண்ணப்பித்த 3.22 லட்சம் பேரில், 1.9 லட்சம் பேர் மட்டுமே தேர்வினை எழுதினர். இந்நிலையில், தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்பை டிஎன்பிஎஸ்சி தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த, உத்தேச விடைகளில் ஏதேனும் தவறு உள்ளது என்று கருதினால், விண்ணப்பதாரர் மேல்முறையீடு செய்யலாம். வரும் 5ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ‘Answer Key Challenge’ என்ற சாளரத்தைப் பயன்படுத்தி முறையீடு செய்யலாம்.
மேல்முறையீடு தொடர்பான கோரிக்கைகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும் என்றும் அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படாது என்று டிஎன்பிஎஸ்சி தெளிவுப்படுத்தியுள்ளது.
பெறப்பட்ட வேண்டுகோள்கள் அனைத்தும் ஒவ்வொரு பாடத்திற்கான வல்லுநர்கள் கொண்ட குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். வல்லுநர் குழுவின் பரிந்துரையில் அடிப்படையில், முடிவுசெய்யப்பட்டு, பின்னர் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
வரும் 5ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு பிறகு இணைய வழியில் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது. இறுதி செய்யப்பட்ட விடைகள், தெரிவுப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற பிறகு தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in