டெல்லியைச் சேர்ந்த கரப்பிணி ஒருவருக்கு வயிற்றில் உள்ள குழந்தையின் பெருமூளை பாதிக்கப்பட்டிருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
இது குறித்து அந்த பெண்ணிடம் கூறிய மருத்துவர்கள், குழந்தை பிறந்தாலும் மாற்றுத்திறனாளியாக இருக்கும் என தெரிவித்தனர். இதனால் மனவேதனையடைந்த அப்பெண் கருவைக் கலைக்கமுடிவு செய்தார்.
ஆனால் 24 வாரங்களைக் கடந்து விட்டால் கருவைக் கலைக்க முடியாது. இது சட்டப்படி குற்றம். கருவில் உள்ள குழந்தை 33 வாரங்களைக் கடத்து விட்டதால் நீதிமன்றம் அனுமதி கொடுத்தால் மட்டுமே கருவை கலைக்கமுடியும் என மருத்துவர்கள் கூறினர்.
இதையடுத்து அந்தப் பெண் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரதிபா எம்.சிங், 33 வாரக் கருவைக் கலைத்துக் கொள்ள அந்த பெண்ணுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
கர்ப்பத்தைக் கலைக்கும் உரிமை, குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்ணுக்குதான் உள்ளது என்று கூறிய நீதிபதி, கருவை கலைத்துக் கொள்ள விரும்புகிற பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
பிறக்கப்போகும் குழந்தையின் கண்ணியமான வாழ்க்கைக்கான வாய்ப்பை அங்கீகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
newstm.in