குஜராத் தேர்தலில் வெறும் 30 ஓட்டுகளை பெற்ற ஐக்கிய ஜனதா தள வேட்பாளர், கட்சித்தலைமை மீது குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஆமதாபாத்தில் உள்ள பாபுநகர் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் பதான் சித்கன் என்பவர் போட்டியிட்டார். எலக்ட்ரீசியனான இவர் வெறும் 30 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
மாநில சட்டசபை தேர்தலில் 1,621 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அதில் குறைவான வாக்குகள் பெற்ற வேட்பாளர் இவர் தான். இது அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்து உள்ளது. தேர்தலில் தனக்காக கட்சித்தலைமை பிரசாரம் செய்யவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு 5 ஆயிரம் வாக்குகள் பெற்றதாக கூறிய அவர், அதைப்போல இந்த தேர்தலிலும் சுயேச்சையாக போட்டியிட்டிருந்தால் கூட அதிக வாக்குகள் பெற்றிருப்பேன் என்று கூறியுள்ளார்.
newstm.in