கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பரசுராம குலாலி (54) என்பவர் மாண்டூர் பைபாஸ் அருகே உள்ள தனது தோட்டத்தில் தங்கியிருந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான அவர் வீட்டில் சண்டையிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பரசுராம குலாலி, தனது மகன் வித்தல குழலி (20) என்பவரை தகாத வார்த்தைகளில் பேசி கொடூரமான முறையில் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மகன் தனது தந்தையை அருகில் இருந்த கட்டையால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பரசுராம துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சடலத்தை மறைப்பதற்காக, அவரது தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் போட முடிவு செய்தார். ஆனால், உடலை போட முடியாததால், கோடாரியால் 30க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டினார்.
அதன்பிறகு ஆழ்துளை கிணற்றில் போட்டுவிட்டு எதுவும் நடக்காதது போல வீட்டிற்குச் சென்றுள்ளார். அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் துர்நாற்றம் வீசியதை அறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், உடலை மீட்டு அரசு மருத்துவமனையின் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி மகனை கைது செய்தனர்.
மகன் கொலையை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in