பண்டிகை காலங்களை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆவின் நிறுவனம், பல புதிய இனிப்பு வகைகள் மற்றும் பால் உபபொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. தீபாவளி பண்டிகையின் போது ஆவின் சிறப்பு இனிப்பு விற்பனை பொது மக்கள் மற்றும் நுகர்வோர் பேராதரவுடன் சிறப்பாக நடைபெற்றது.
அதே போன்று, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நுகர்வோர் கொண்டாடும் வகையில் சிறப்பு கேக் வகைகளான பிளாக் பாரஸ்ட் கேக், சாக்கோ ட்ரிபில், ஸ்ட்ராபெரி கேக், பைனாப்பில் கேக், ஒயிட் ஃபாரஸ்ட் கேக், பட்டர்ஸ்காட்ச் கேக், ரெயின்போ கேக், பிளாக்கரண்ட் கேக், ரெட் வெல்வெட் கேக், டெத் பை சாக்லேட் கேக், பிளம் கேக் ஆகியவை 800 கிராம், 400 கிராம் மற்றும் 80 மி கிராம் அளவுகளில் ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படும்.
விருகம்பாக்கத்தில் உள்ள அதிநவீன ஆவின் பாலகத்தில் நடைப்பெற்ற சிறப்பு மிக்க நிகழ்வில், பால்வளத்துறை அமைச்சர் நாசர், இக்கேக்கு வகைகளை விற்பனைக்கு அறிமுகம் செய்துவைத்தார்.