ஆசிரியை ஒருவர் 5ஆம் வகுப்பு மாணவியை முதல் மாடியில் இருந்து கீழே வீசி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நகர் நிகாம் பகுதியில் பிராத்மிக் வித்யாலயா என்ற பள்ளியில் கீதா தேஷ்வால் என்ற ஆசிரியை ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்க வகுப்பறைக்கு சென்றுள்ளார்.
காலை 11 மணி அளவில் ஆசிரியை கீதா பாடம் எடுத்துக்கொண்டிருந்த போது, வந்தனா என்ற மாணவி வகுப்பை சரியாக கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை மாணவியை கடுமையாக அடித்துள்ளார். கத்திரிகோலை வைத்து மாணவியின் தலைமுடியை வெட்டியும் இருக்கிறார்.
அதோடு நிற்காமல் அந்த மாணவியை அவர் படிக்கும் 5 ஆம் வகுப்பறை முதல் மாடி ஜன்னலில் இருந்து கீழே வீசியுள்ளார். கீழே விழுந்த மாணவியை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட ஆசிரியை கீதாவை அப்பகுதியினர் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அவரை கைது செய்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை கேட்டு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
newstm.in