சென்னை போரூரை அடுத்த அய்யப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் என்பவர் தனியார் நிதி நிறுவன வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
அவர் மனைவி திவ்யா, குழந்தைகள், பெற்றோர் ஆகியோருடன் நேற்று இரவு தேனாம்பேட்டையில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்று கொண்டிருந்தார். காரை திவ்யா ஓட்டினார்.
கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது காரில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதை கவனித்த திவ்யா உடனே காரை நிறுத்தியுள்ளார்.
பிறகு அனைவரும் காரில் இருந்து வெளியே வந்த சில நிமிடத்திலேயே கார் பற்றி எரிந்துள்ளது. இதைப்பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சில நிமிடம் தாமதித்திருந்தாலும் அனைவரும் தீயில் சிக்கியிருப்பார்கள்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றிய தீயை அனைத்தனர். இதில் காரின் முன் பகுதி முழுவதும் எரிந்து விட்டது. இது குறித்து பரங்கிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் கத்திப்பாரா பகுதியில் கிண்டி நோக்கிச் செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
newstm.in