பேடிஎம் நிறுவனமானது, தனது ஆப் வழியாக மின்சார கட்டணத்தை செலுத்தும் வாடிக்கையாளர்கள் பெரிய அளவிலான தொகையை மிச்சப்படுத்த உதவும் பிஜிலி டேஸ் (Bijlee Days) என்கிற சலுகையை வழங்குகிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?
பிஜிலி டேஸின் சிறப்பம்சமே பயனர்களுக்குமே நம்பமுடியாத கேஷ்பேக் மற்றும் உறுதியான ரிவார்ட்ஸ் கிடைக்கும் என்பது தான்.
பிஜிலி டேஸ் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிக்குள் அணுக கிடைக்கும். குறிப்பிட்ட தேதிக்குள் மின்சார கட்டணம் செலுத்தும் போது, ஒவ்வொரு நாளும் குறைந்தது 50 பயனர்களுக்கு 100% கேஷ்பேக் கிடைக்கும். இந்த கேஷ்பேக் சலுகையின் கீழ் அதிகபட்சமாக ரூ. 2,000 வரை கிடைக்கும் என்கிற தகவலையும் பேடிஎம் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது!
கேஷ்பேக் சலுகைகள் மட்டுமின்றி, பேடிஎம் ஆப்பின் பிஜிலி டேஸ் சலுகையின் கீழ் இந்தியாவின் மிகச்சிறந்த ஷாப்பிங் மற்றும் டிராவல் பிராண்டுகளின் தள்ளுபடி வவுச்சர்களும் கிடைக்கும். அதுமட்டுமின்றி, பேடிஎம் ஆப்பை பயன்படுத்தி முதல் முறையாக மின்சார கட்டணம் செலுத்த போகிறீர்கள் என்றால், ‘ELECNEW200’ என்கிற குறியீட்டை பயன்படுத்தும் பட்சத்தில், உங்களுக்கு ரூ.200 வரையிலான கேஷ்பேக் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.