ஐபிஎல் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது. இதில் போட்டிக் போட்டுக் கொண்டு அணிகள் வீரர்களை வாங்கின. இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக இங்கிலாந்து வீரர் சாம் கரண் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் அணி இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரணை 18.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரரை இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் எடுப்பது இதுவே முதல்முறை.
அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேமரூன் கிரீன் 17.50 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். பென் ஸ்டோக்ஸை16.25 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் ஏலம் எடுத்துள்ளது.
லக்னோ அணி வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிகோலஸ் பூரனை, 16 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஹெய்ன்ரிச் கிளாசன், ஹைதராபாத் அணியால் 5.25 கோடி கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் 6 கோடி கொடுத்து சிவம் மாவியை வாங்கியுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இங்கிலாந்தை சேர்ந்த ஹாரி புரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கும், மயங்க் அகர்வாலை 8.25 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜேசன் ஹோல்டரை 5.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
newstm.in