சென்னை எழும்பூர் ரயில் நிலையம் தற்போது புது பொலிவை அடையவுள்ளது. ரூ. 735 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் எழும்பூர் நீதிமன்றத்தை மறு சீரமைப்பு செய்ய தென்னக ரயில்வே முடிவு எடுத்துள்ளது. அதன்படி சென்னை மாநகரின் மிக பெரும் அடையாளங்களின் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையம் கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 117 ஆண்டுகள் பழமையான இந்த ரயில் நிலையத்தை 734 கோடியா 91 லட்சம் ரூபாய் மதிப்பில் மதிப்பில் உலக தரத்தில் நவீன வசதிகளுடன் மறு சீரமைப்பு செய்ய ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
விமான நிலையத்தில் இருப்பதுபோல பயணிகள் வருகை, புறப்பாடு மற்றும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அனைத்து பயணிகளும் பயன்படுத்தும் வகையில் அடிப்படை வசதிகள் மற்றும் பார்க்கின் வசதிகள் இங்கு செய்யப்பட உள்ளன. இதற்காக ஹைதராபாத் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சீரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு 36 மாதத்திற்குள் மறுசீரமைப்பு பணிகளை நிறைவு செய்ய வேண்டும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.மறுசீரமைப்பு பணியை வரும் 2025-க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்,117 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை ₹734.91 கோடியில் மறுசீரமைக்கும் பணிகள் துவங்கியுள்ள நிலையில் மாதிரி படங்களை வெளியிட்டது தென்னக ரயில்வே.