ஜே.இ.இ. தேர்வுக்கு தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் பதிவு செய்வதில் இருந்து தேசிய தேர்வு முகமை விலக்கு அளித்துள்ளது.
என்.ஐ.டி, ஐ.ஐ.டி உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஜேஇஇ தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இதற்கு முன் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வந்த நிலையில், தற்போது நீட் தேர்வை நடத்தை தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்தி வருகிறது.
ஜனவரி 24ம் தேதி தொடங்கும் முதல் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த 15ம் தேதி முதல் ஆன்லைனில் பெறப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் தமிழ்நாட்டு மாணவர்களுக்க சிக்கல் எழுந்தது.
ஏனென்றால் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு மதிப்பெண் கேட்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை.
இதனால் தமிழக மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்காத முடியாத நிலை ஏற்பட்டது. 30,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 10ஆம் தேர்வு மதிப்பெண் பதிவிடுவதில் இருந்து தளர்வு அளிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை வைத்ததுது.
தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில் விடுத்த கோரிக்கையை தேசிய தேர்வு முகமை ஏற்றுக்கொண்டு விலக்கு அளித்துள்ளது. எனவே தமிழகத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை பதிவிடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
newstm.in