தென் ஆப்பிரிக்காவில் எரிவாயு டேங்கர் லாரி வெடித்து சிதறிய விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
தென் ஆப்பிரிக்க தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் சென்று கொண்டிருந்த எரிவாயு டேங்கர் லாரி ஒன்று, பாலம் ஒன்றின் அடியில் சிக்கிக் கொண்டது. அந்த லாரியை நகர்த்த முயன்றபோது அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இந்த சம்பவத்தில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர் என்றும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. எனினும் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த கோர விபத்தால் அந்த பாலத்தின் அருகில் இருந்த கட்டிடங்களும் சேதமடைந்தது. அங்கிருந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு மேற்கூரை உடைந்தது. இரண்டு வீடுகள் மற்றும் பல கார்கள் சேதம் அடைந்தன.
இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவசர சேவை செய்தித் தொடர்பாளர் வில்லியம் என்ட்லாடி தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள தம்போ நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான அதன் முயற்சிகள் அதன் கூரை சேதமடைந்ததால் தடைபட்டதாக கூறப்படுகிறது.
Momentos de la explosión este sábado de un camión cisterna que transportaba combustible, el cual dejó al menos ocho personas muertas y más de 50 heridos en la ciudad de Johannesburg, Sudáfrica.#NoticiasSIN #sudafrica #explosion pic.twitter.com/M8BpxfxjAn
— Noticias SIN (@SIN24Horas) December 24, 2022
மருத்துவமனையின் உள்ளே இருந்து டுவிட்டரில் ஒரு வீடியோ, மக்கள் பதற்றமாக ஓடும் ஒரு குழப்பமான காட்சியை வெளியாகி இருந்தது. மேலும், பாலத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருவதாகவும், அருகில் உள்ள இரண்டு வீடுகளில் தீயை அணைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் வில்லியம் என்ட்லாடி தெரிவித்தார்.
newstm.in