காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு நெல்லை மாவட்டத்தில் ஆய்வுப் பணி மேற்கொண்டார். புதிய ரோந்து வாகனத் திட்டத்தை தொடங்கி வைத்த அவர், ஆயுதப்படை மைதானத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு அறையை திறந்து வைத்து, அங்குள்ள போலீசாரின் குடும்பத்தினரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் 3967 ரெளடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் நெல்லை சரகத்தில் மட்டும் 777 மட்டும் ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டு தமிழக முழுவதும் 23 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை தொடர்பாக 9,207 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 12,635 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
மேலும், பணியின்போது இறந்து போன காவலர்களின் குடும்பங்களுக்கு வாரிசு வேலை என்பது 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. தற்போது முதல்வர் உத்தரவின் பேரில் 1132 பேருக்கு நிலைய வரவேற்பு அதிகாரி என்கிற பதவி வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
கூலிப்படைக்கு எதிரான நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்டு சிறப்பு படை உருவாக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் கூலிப்படை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
newstm.in