புதுச்சேரியில் கூடுதலாக சால்னா கேட்டு ஓட்டலை சூறையாடிய 2 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த டேவிட் பாஸ்கர் (57) என்பவர் லாஸ்பேட்டை கல்லூரி சாலையில் உள்ள ஓட்டலில் மேலாளராக உள்ளார். அந்த ஓட்டலுக்கு கிருஷ்ணகுமார், அவரது நண்பர் ஜெயகணேஷ் என்ற இரண்டு பேர் வந்து பிரைடு ரைஸ் வாங்கியுள்ளனர்.
பின்னர் அதற்கு கூடுதலாக சால்னா மற்றும் சாஸ் கேட்டுள்ளனர். அதற்கு ஓட்டல் ஊழியர்கள் தரமறுக்கவே அவர்கள் கடாய் மற்றும் கரண்டியால் டேவிட் பாஸ்கரை தாக்கியுள்ளனர்.
ஓட்டல் பொருட்களையும் சூறையாடி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணா மற்றும் ஜெய்கணேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in