உத்தர்கண்ட் மாநிலத்தில் சாலை தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரிஷப் பண்ட், டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது கார் சாலை தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயங்களுடன் ரிஷப் பண்ட் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பண்ட் காரை ஓட்டிச் சென்றதாகவும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூர்க்கி அருகே விபத்து நடந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்ததும் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பண்ட் விரைந்து நலம் பெற வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
newstm.in