சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு!!

சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.

சபரிமலையில் மண்டல பூஜை முடிந்த நிலையில் அடுத்த மகர விளக்கு பூஜைக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடையின்றி மின்சாரம் வழங்க மின் விநியோகம் செய்யும் வழித்தடங்களில் பழுதுகள் சரி செய்யும் பணி முடிந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், பக்தர்கள் தங்குவதற்கான இடங்கள், நடந்து செல்லும் பாதை உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டுள்ளன. அதே போல சன்னிதானம் செல்லும் வழியில் நீர் விநியோகத்தை முறையாக தடையின்றி வழங்குவதற்கான பணிகளில் நீர்வள ஆணையம் ஈடுபட்டுள்ளது.

இந்த முறை சபரிமலைக்கு மகர விளக்கு சீசனில் தரிசனம் செய்ய வரும் லட்ச கணக்கான பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவஸ்தானம் செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படும் நடை வரும் ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்தை தொடர்ந்து ஜனவரி 20 ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.